Friday, January 17, 2025
HomeLatest Newsஒரு நிமிடத்தில் 1000 தடவை கைதட்டல் உலக சாதனை

ஒரு நிமிடத்தில் 1000 தடவை கைதட்டல் உலக சாதனை

ஒரு நிமிடத்தில் அதிக கை தட்டும் கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

முன்னர் எலி பிஷப் என்பவர் கொண்டிருந்த ஒரு நிமிடத்தில் 1103 என்ற இந்த சாதனையை மற்றுமொரு 20 வயது அமெரிக்கரான டால்டன் மேயர் முறியடித்துள்ளார்.

அவர் ஒரு நிமிடத்தில் 1,140 முறை கைதட்டி கின்னஸ் உலக சாதனையை முறியடித்தார்.

அத்துடன் அவர் ஒரு வினாடியில் 37 தடவை கைதட்டிய சாதனையையும் ஏற்படுத்தியுள்ளார்.

தமது சிறு வயதில் ஆரம்ப பாடசாலையில் கற்கும்போது ஒரு நிமிடத்தில் அதிக கைதட்டல் செய்த சாதனையை முதன்முதலில் தாம் ஏற்படுத்தியதாக புதிய சாதனையாளரான டால்டன் மேயர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Recent News