Tuesday, December 24, 2024
HomeLatest Newsகனடாவில் பரவும் ‘ஜாம்பி’ நோய்! வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் பரவும் ‘ஜாம்பி’ நோய்! வெளியான அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாகவே உலகின் அனைத்து நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

கொரோனா வேக்சின் பணிகளுக்குப் பின்னர், இப்போது தான் உலக நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

இந்த நிலையில் கனடாவில் கொரோனாவை விட கொடூரமான ஜாம்பி நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இந்த நோய் ஒவ்வொரு மனிதராக பரவி அவர்களை வெறி பிடித்தவர்கள் போல நடந்து கொள்ள வைக்கும்.

இப்படியான ஒரு வியாதி சமீபத்தில் பரவி வருவதாக ஒரு அதிர்ச்சிகர செய்தி ஒன்று வைரலாக பரவி வருகிறது.

கனடா நாட்டில் உள்ள மான்களுக்கு இடையே நாள்பட்ட விரய நோய் Chronic Wasting Disease (CWD) என்ற நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கனடா நாட்டின் அல்பெர்டா, சாஸ்கட்ச்வான் ஆகிய பகுதிகளில் இந்த நோய் மான்கள் மத்தியில் பரவி வருவதாக கூறப்படுகிறது.

மான், மிளா போன்ற அனைத்து வகை மான் இனங்களுக்கு மத்தியிலும் இந்த நோய் பரவி வருகிறது.

இந்த நோய் முதன் முதலில் 1960ல் அமெரிக்காவின் கண்டுபிடிக்கப்பட்டது. இது மெல்ல மெல்ல அமெரிக்காவின் 26 மாகாணங்களில் பரவியது. தற்போது இதே நோய் தற்போது கனடாவில் பரவி வருகிறது

இந்த நோய் மனித உடலுக்குள் செல்வது எவ்வறான பாதிப்புகளை ஏற்படும் என்ற அறிவியல் ரீதியிலான ஆய்வுகள் இல்லை.

இருந்தாலும் விஞ்ஞானிகள் இந்த நோயிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்த நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளை அடித்து சமைத்து சாப்பிடுவது மூலம் இந்த நோய் மனிதர்களுக்கு பரவவும் வாய்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நோய்கிருமிகள் மனித ரத்தத்துடன் கலந்து விட்டால் அது மனித உடலுக்குள் பரவ தொடங்கிவிடும்.

இது மட்டுமல்ல இந்த நோய் பாதித்த விலங்குகளை கையாண்டால் கூட அந்த கிருமிகள் மனித உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நோய் மிருகங்களுக்கு பாதிக்கப்பட்டதும் அது நேரடியாக அதன் மூளையை தாக்கி மிருகம் அதன் கட்டுப்பாட்டை இழக்கிறது.

இந்த நோய் பாதிக்கப்பட்ட மிருகங்கள் வாயில் வழக்கத்தை விட அதிகமாக எச்சில் வடிவது, மற்ற மிருகங்களுடன் சேராமல் இருப்பது, வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைககள், அதிகமாக நீர் வெளியேறுவது, உடல் எடை குறைவது போன்ற அறிகுறிகள் உள்ளன.

அதனால் மனிதர்களுக்கு இது போன்று நடந்தால் மனிதர்களும் ஜாம்பிகளாக மாற வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது.

Recent News