Friday, January 24, 2025
HomeLatest NewsWorld Newsஜப்பானில் அறிமுகமாகும் விசித்திர திட்டம், மகிழ்ச்சியில் இளைஞர்கள்..!

ஜப்பானில் அறிமுகமாகும் விசித்திர திட்டம், மகிழ்ச்சியில் இளைஞர்கள்..!

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஜப்பானில் தனியாக வாழும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், வாடகைக்குக் காதலர்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஜப்பான் அரசு கொண்டுவந்துள்ளது.


ஜப்பானில் ஏராளமான இளைஞர்கள், இணை கிடைக்காமல் மனதளவில் சோர்வடைந்துள்ளதாகவும் இதனால், காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் திட்டத்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதாவது ஒரு மணிநேரத்திற்கு 3,000 ரூபாய்க்குக் காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாமாம். ஆனால், குறைந்தபட்சம் 2 மணிநேரத்திற்கு அவர்களை வாடகைக்கு எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி இணையைத் தேர்வு செய்யும் இணையதளத்திற்கு முன்பணமும் செலுத்த வேண்டுமாம்.மேலும் உங்களுக்கான இணையை தேர்வு செய்யக் கூடுதலாக ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும். வாடகைக்கு இருக்கும் இணையை நேரடியாக வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளக்கூடாது. அதற்காகவே இருக்கும் செயலி மூலமே தொடர்பு கொள்ள வேண்டும்.

வாடகைக்கு எடுக்கும் நபர்களிடமிருந்து எவ்விதமான பரிசுப் பொருட்களையும் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட இணையவாசிகள் கலவையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.

Recent News