Sunday, January 19, 2025
HomeLatest Newsபொல்லால் தாக்கி இளைஞன் படுகொலை!

பொல்லால் தாக்கி இளைஞன் படுகொலை!

தெரணியகலை,போரலங்கட பிரதேசத்தில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

போரலங்கட, தெஹிஹோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு கொல்லப்படடுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கரவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு முற்றியதில், சந்தேக நபர், கொல்லப்பட்டவரை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரணியகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News