பொது இடத்தில் முத்தமிட்டதால் இளம் ஜோடிக்கு 21 சவுக்கடி தண்டனையாக வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சுமத்ராவில் இடம்பெற்றுள்ளது.
24 வயது இளைஞனும், 23 வயது இளம் பெண்ணும் பார்க்கிங் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் முத்தமிட்டுள்ளனர்.
அதனை பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்ட நிலையில் இருவரையும் இஸ்லாமிய சட்டத்தின் பிரகாரம் காவலில் வைத்துள்ளனர்.
இது குறித்து பொலிஸார், இருவரும் நாட்டின் விதி 25 (1) ஐ மீறியுள்ளதால் அவர்களுக்கு 25 கசையடிகள் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் ஷரியா சட்டம் நடைமுறையில் இருப்பதால் அத்தகைய சூழ்நிலையில் அவர்களின் தண்டனையும் அதற்கேற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவருக்கும் கசையடி கொடுப்பதற்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பொலிஸாரிற்கு முன்பாகவே தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
அந்த இளம் பெண் தாக்கப்பட்டவுடன் தரையில் விழுந்து புலம்பியுள்ளார்.
25 கசையடிகள் என்று தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் அதில் 4 கசையடிகள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் இந்த சட்டம் எல்லா இடங்களிலும் நடைமுறையில் காணப்படாத போதிலும் 34 மாநிலங்களில், ஷரியா சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மாநிலம் ஆச்சே ஆகும்.
முத்தத்தைத் தவிர, விபச்சாரம், திருமணத்திற்கு முந்தைய உடலுறவு அல்லது மது அருந்துதல் போன்ற விடயங்களால் எவரேனும் பிடிபட்டால் அவர்களிற்கு அதே தண்டனையே விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.