Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஇந்தியாவில் நீங்கள் குறிவைக்கப்படுவீர்கள் - எச்சரிக்கும் கனடா..!

இந்தியாவில் நீங்கள் குறிவைக்கப்படுவீர்கள் – எச்சரிக்கும் கனடா..!

இந்தியா – கனடா வெளியுறவு தொடர்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து
அந்நாடு இந்தியாவிற்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.


இந்த அறிவுறுத்ததல் கனடா, தனது தூதரக அதிகாரிகள் 41 பேரைத் திரும்ப பெற்றுக்
கொள்வதாக அறிவித்த சில மணி நேரங்களில் வெளியாகியுள்ளது. காலிஸ்தான் பிரிவனைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவில் கொலை செய்யப்பட்டதன்
பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.


இதனை தொடர்ந்து இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கனடா மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
” ஆர்ப்பாட்டங்களும் கனடாவுக்கு எதிரான போரட்டங்களும் நிகழலாம். கனடா மக்கள், மிரட்டல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாகலாம். தலைநகரான தில்லியில் கனடா மக்கள் தங்களை எங்கும் வெளிப்படுத்திக் கொள்ளாமலும் உங்களின் தனிப்பட்ட விபரங்களைப் புதியவர்களிடம் பகிராமலும் இருக்க வேண்டும்” என அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


“சிறிய குற்றங்கள் அங்கு வழக்கமானவை. பெரும்பாலான நகரங்களில் குற்றவாளிகள் வெளிநாட்டவர்களையே குறி வைப்பார்கள்” எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News