காதலராக இருந்த பொழுது செலவழித்த பணத்தில் பாதியை தருமாறு முன்னாள் காதலிக்கு காதலன் கெடு விதித்துள்ளமை பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரே இவ்வாறு பாதி பணத்தை தருமாறு தனது முன்னாள் காதலியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அலெக்ஸ் என்ற அந்த இளைஞர் அய்லே என்ற பெண்ணை காதலித்து வந்துள்ள நிலையில், இருவரும் திருமணம் செய்யாது ஒரே வீட்டில் வசித்துள்ளனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
அதன் காரணத்தினாலே அலெக்ஸ், காதலித்த பொழுது தான் செலவழித்த பணத்தில் பாதியை திருப்பி தருமாறு அய்லேக்கு பட்டியல் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
அய்லே, தன் காதலன் விதித்த நிபந்தனை குறித்து சமூக வலைத்தளம் ஒன்றில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளதுடன், அலெக்ஸ் வாகனத்திற்கான எரிபொருள் செலவு, உணவு, தண்ணீர் செலவு மற்றும் சினிமா டிக்கெட் என ஒன்றும் விடாது அனுப்பியிருந்த நீண்ட பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக காதலில் இருந்த பொழுது, அய்லேயை பணத்தை செலவு செய்ய ஒருபோதும் அலெக்ஸ் அனுமதிக்காது இருந்துள்ளதுடன் காதலியின் மீது இருந்த பிரியத்தால் அவரே பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார். ஆனால், செய்த செலவுகளை உடனுக்குடன் குறிப்பெடுத்து வைத்துள்ளார்.
ஆனால், காதலில் பிரிவு ஏற்பட்ட நிலையில் செய்த செலவுகள் அனைத்தையும் பட்டியலிட்டு, பாதி பணத்தை அனுப்பி வைக்குமாறு அலெக்ஸ் கெடு விதித்துள்ளார்.
இந்நிலையில், இந்தச் செய்தி இணைய உலகில் பரவி பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.