மாதமொன்றிற்கு 1 கோடி ரூபாய் வருமானம் வரும் தொழிலிலிருந்து ஓய்வு பெறுவதாக 11 வயது சிறுமி அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிறுமி ஒருவர் பொம்மைகளை உருவாக்கி அதன்மூலம் மாதம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிக்சி கர்டிஸ் (Pixie Curtis) எனும் 11 வயது சிறுமியே இவ்வாறு சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
பிக்ஸி மூன்று ஆண்டுகளுக்கு முன் தனது தொழிலைத் தொடங்கியுள்ளார். அதாவது குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான பொம்மைகளை ஒன்லைனில் விற்பனை செய்து வந்துள்ளார்.
சில மாதங்களிலே அவரது பிராண்ட் நல்ல வரவேற்பு பெறத் துவங்கியுள்ளது. அவுஸ்திரேலிய நாட்டிலுள்ள குழந்தைகள் இவரது பொம்மைகளை அதிக அளவில் வாங்கியுள்ளார்கள். இதனால் அவுஸ்திரேலியாவில் இவரது பொம்மைகள் கூடுமானவரை விற்பனை ஆனது.
பிக்ஸி தனது படிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறி தனது தொழிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கூறியுள்ளார். இதனைப் பற்றிப் பெற்றோரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் பிக்ஸிக்கு சொந்தமாக ஒரு மெர்சிடஸ் பென்ஸ் காருமிருக்கிறது.
அதேவேளை மாதம் 1.1 கோடி ரூபாய் (110,000 யூரோ) அளவுக்கு பொம்மைகளை விற்பனை செய்து வருகிறார் பிக்சி. கூடவே சிறுவர்களுக்கான பிற மேக்கப் பொருட்களும் விற்பனையாகின்றன. சமீபத்தில் தன்னுடைய 11 வது பிறந்தநாளை பிக்சி கொண்டாடினார்.
இந்நிலையில் தனது தொழிலில் இருந்து தற்காலிக ஓய்வெடுக்க முடிவெடுத்திருப்பதாகவும் தனது கல்வியில் கவனத்தை திருப்ப உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.