Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld News2 இலட்சம் இந்திய கணக்குகள் குறித்து எக்ஸ் தளத்தின் முடிவு!!!

2 இலட்சம் இந்திய கணக்குகள் குறித்து எக்ஸ் தளத்தின் முடிவு!!!

2 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய (India) கணக்குகளை எக்ஸ் (X) தளம் அதிரடியாக நீக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை ஊக்குவித்தல், சுயநினைவில் இல்லாத நிலையில் இருக்கும்போது ஒருவரை ஆபாசமாக சித்தரித்து Non – consensual nudity புகைப்படத்தையோ காணொளியையோ பதிவிடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்ட 2,29,925 இந்திய கணக்குகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.மேலும், 967 கணக்குகள் தீவிரவாதத்தை ஊக்குவித்த காரணத்தினால் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, 230,892 இந்திய கணக்குகள் எக்ஸ் தளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.இந்தியா முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 17,580 முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சமீபத்தில் ஆபாச சித்தரிப்புகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பதிவிடவும் பகிரவும் அனுமதி வழங்கும் முடிவை எக்ஸ் நிறுவனம் அறிவித்தது.எனினும், சட்டவிரோதமான வகையிலுள்ள ஆபாச பதிவுகள் நீக்கப்படும் எனவும் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News