Friday, November 22, 2024
HomeLatest Newsஉலகின் மிகவும் பழமையான பனிப்பாறை..!அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

உலகின் மிகவும் பழமையான பனிப்பாறை..!அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

தென்னாப்பிரிக்காவில் சுமார் 290 கோடி ஆண்டுகளிற்கு முன்னர் இருந்த பனிப்பாறைகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இந்த ஆய்வினை, அமெரிக்கா,ஓரிகான் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் இல்யா பிந்தேமேன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்களே மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில், தென்னாப்பிரிக்காவில் உள்ள மிக பெரிய தங்க சுரங்கத்திற்கு அருகில் பனிப்பாறைகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதுடன், அவை 290 கோடி ஆண்டுகளிற்கு முற்பட்டதாக இருக்கலாம் என்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த இடத்தில் பனிப்பாறைகளின் கழிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளமையால் அந்த பகுதி ஆரம்பத்தில் எப்படி இருந்ததோ அதே போன்றே தற்பொழுதும் இருப்பதாகவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அந்த பாறைகளில் கிடைத்த துகள்களை வைத்து அது பாறைகளாக இருந்த போது அதன் தட்ப வெப்பம் மிகவும் குளிராக இருந்திருக்க்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த பகுதி உலகின் மிகவும் பழமையான பனிப்பாறைகள் கொண்ட பகுதியாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News