இந்த உலகில் உள்ள நாய்கள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை அதிகபட்சம் உயிர்வாழும். ஒரு சில நாய் இனங்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கும்.
இந்நிலையில் 23 ஆண்டுகள் வாழ்ந்து வரும் அமெரிக்க நாய் ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
ஸ்பைக் என்று பெயரிடப்பட்டுள்ள சிவாவா இன கலவை நாய் ஒன்று 23 ஆண்டுகள் 7 நாட்கள் வாழ்ந்து உலக சாதனை பிடித்துள்ளது.
பொதுவாக சிவாவா இனத்தில் உள்ள நாய் 12-18 ஆண்டுகள் உயிர் வாழும். அதன் கலப்பு இனங்கள் கொஞ்சம் கூடுதல் நாட்கள் உயிரோடு இருக்கும்.
லாஸ் ஏஞ்சல்ஸில் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ,ஜினோ என்ற 22 வயதான சிவாவா கலப்பு நாய் , உலகின் மிக வயதான நாய் என்று பெயரிடப்பட்டது.
அதன் பின்னர் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஸ்பைக் அந்த சாதனையை முறியடித்துள்ளது.
2022 வது ஆண்டில் வயதான நாய் என்று உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ள நான்காவது நாயாக ஸ்பைக் உள்ளது.
நவம்பர் 1999இல் பிறந்த ஸ்பைக் 2010-ம் ஆண்டு தற்போதைய உரிமையாளரின் கைகளுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை ரீட்டா கிம்பால் என்பவர் ஸ்பைக்கை மளிகைக் கடையின் வாகன நிறுத்துமிடத்தில் அடிபட்ட நிலையில் கண்டறிந்துள்ளார். பின்னர் அதை தத்தெடுத்து இன்று வரை வளர்த்து வருகிறார்.
பார்ப்பதற்கு சிறிய நாயாக இருந்தாலும் பெரிய நாயிடம் உள்ள துணிவும் தைரியமும் இதனிடம் காணப்பட்டது.
அதனால் தான் ஸ்பைக் என்று பெயர் வைத்தோம். வயதாவதால் கண்பார்வை மங்கிவிட்டது. ஆனால் கோடை கால வார இறுதிகளில் ஸ்பைக் நீண்ட நடைப்பயணத்தை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டும் என்கிறார் ரீட்டா கிம்பால்.