கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றிருந்த உலகின் மிக வயதான நாய் இந்த வார ஆரம்பத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெபல்ஸ் என்ற அந்த டோய் பொக்ஸ் டெரியர் வகை நாய், 22 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தது. அது 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி பிறந்தது.
பெபல்ஸ் அதன் வாழ்க்கையின் பெரும்பகுதியை அமெரிக்காவின் செளத் கரோலைனாவில் வசித்தது. அது 32 குட்டிகளையும் பெற்றெடுத்தது.
அதன் இறப்பை அறிவித்த கின்னஸ் உலக சாதனைகள் குழு, பெபல்ஸ் உயிருடன் இருந்தபோது அதுவே உலகின் மிக வயதான நாய் என்பதை உறுதிசெய்தது.
பெபல்ஸ் இயற்கையான காரணங்களால் உயிரிழந்தது என்றும், அது உயிரிழக்கும்போது அதைச் சுற்றிக் குடும்பத்தார் இருந்தனர் என்றும் அதன் உரிமையாளரான ஜூலி கிரகோரி அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டார்.
2012ஆம் ஆண்டில் அது பூனைகளுக்கான உணவைச் சாப்பிட வேண்டும் என்று விலங்குநல மருத்துவர் குறிப்பிட்டிருந்தார்.
பூனைகளின் உணவில் கூடுதல் புரதச் சத்து உள்ளது. அன்றிலிருந்து பெபல்ஸ் அவ்வாறே பூனைகளுக்கான உணவைத் தின்று வளர்ந்தது.