Wednesday, December 25, 2024
HomeLatest Newsஉலக சாதனைப் படைத்த ஐஸ்கிரீம்..! வியப்பில் மக்கள்..!

உலக சாதனைப் படைத்த ஐஸ்கிரீம்..! வியப்பில் மக்கள்..!

ஐஸ்கிரீம் ஒன்று உலக சாதனை படைத்துள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பானிய ‘பைகுயா’ என்ற ஐஸ்கிரீம் உலகின் மிகவும் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என்ற சாதனையை தன்வசமாகியுள்ளது.

ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்டான செல்லாடோ தயாரித்த ‘பைகுயா’ உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என, கின்னஸ் உலக சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்விலை சுமார் 873,400 ஜப்பானிய யென் மதிப்பாகும்.

இத்தாலியின் அல்பாவில் வளர்க்கப்படும் ஒருவகை அரிய வெள்ளை நிற பாசிகளைக் கொண்டு இந்த பைகுயா ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதே இதன் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் விலை ஒரு கிலோவிற்கு 2 மில்லியன் ஜப்பானிய யென் விலையாகும். மற்ற சிறப்புப் பொருட்களான பார்மிஜியானோ, ரெஜியானோ மற்றும் சேக் லீஸ் ஆகியவை இதில் மூலப்பொருட்களாக போடப்பட்டு தயாரிக்கப்படுகின்றது.

Recent News