Friday, November 15, 2024
HomeLatest Newsபிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்!

பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்!

பிரித்தானியாவில் அதிக காலம் மகுடத்தை வைத்திருந்த 96 வயதான இரண்டாம் எலிசபெத் மகாராணி நேற்று (08) காலமானார்.

இந்நிலையில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானிய ராணி தனது புத்திசாலித்தனத்தால் அனைவரையும் கவர்ந்த தலைவர் என்றும், எப்பொழுதும் தனது ஞானத்தை தாராளமாக அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எலிசபெத் மகாராணி தனது கருணை மற்றும் அயராத உழைப்பால் உலகைக் கவர்ந்தவர் என்று கூறியுள்ளார்.

இதனிடையே, ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு உலக அரசியலில் நிரப்ப முடியாத வெற்றிடமாகும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் புதிய மன்னரான மூன்றாம் சார்லஸ் இளவரசர் அனுப்பியுள்ள செய்தியில் ரஷ்ய ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம் தொடர்பாக பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதி இது தொடர்பான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ராணி இரண்டாம் எலிசபெத் தனது குடிமக்களின் அன்பையும் மரியாதையையும் உலக அரங்கில் அதிகாரத்தையும் சரியாக அனுபவித்த ஒரு தலைவராக அறிய முடியும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.பிரான்சின் தோழியாக இருந்த நல்ல உள்ளம் கொண்ட ராணியை உலகம் இழந்துவிட்டது.

Recent News