Tuesday, December 24, 2024
HomeLatest Newsஉலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள பகீர் தகவல்!

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள பகீர் தகவல்!

உலகளவில் கொரோனா உயிரிழப்பு 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு 14 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் விடுபட்ட கொரோனா மரணங்ககளை கணக்கில் கொண்டுவந்தது, அமெரிக்கா, சிலியில் கொரோனா இறப்பு வரையறையில் மாற்றங்களை செய்தது ஆகியவற்றால் உலகளவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 43 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகளவில் ஒரு வாரத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 45 ஆயிரம் பேர் தொற்றால் மரணமடைந்து உள்ளனர்.

இது மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையிலான நிலவரம் ஆகும். இந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

Recent News