உலக முட்டை தினம் 1996 ஆம் ஆண்டு வியன்னாவில் நிறுவப்பட்டது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் இரண்டாவது வெள்ளிக்கிழமை முட்டையின் சக்தியைக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் அதிக ஊட்டச்சத்துகொண்ட உணவு முட்டை மட்டும்தான். எனவே வளரும் குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஊட்டச்சத்துகள் மட்டுமன்றி உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் முட்டையில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வைட்டமின்கள் – ஏஇ பி 12இ பி 2இ பி 5இ இ முதலியவை கோலின்இ சீயாந்தீன் போன்ற கனிமச்சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளன.
கொழுப்புச் சத்துகளின் இருப்பிடமாக மஞ்சள் கரு இருப்பதால், அதை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதயப் பாதிப்பு இருப்பவர்கள், வயதானவர்கள், உடலில் கோளாறு இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளெல்லாம் மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது.
கோழியின் உணவுமுறை எப்படி என்பதைப் பொறுத்தே, மஞ்சள் கருவின் நிறமும் அடர்த்தியும் அமையும் என்பதால், மஞ்சள் கருவின் நிறத்தைவைத்து அதன் தன்மையை முடிவுசெய்வது தவறு.
அதேபோல, பச்சை முட்டையைக் குடிப்பது பாக்டீரியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், அதையும் தவிர்த்துவிடலாம். பல வீடுகளில், வளரும் குழந்தைகளுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் பச்சை முட்டை கொடுக்கும் வழக்கம் உண்டு.
இவ்வாறாக ஏராளமான பலன்களை தரும் முட்டையினை வருடத்தில் ஒருநாளிலாவது அதனை நினைவுகூறுவது சிறப்பு.