Wednesday, December 25, 2024
HomeLatest Newsஇந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண போட்டி!

இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண போட்டி!

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான பெண்களுக்கான உலகக் கிண்ண ஒருநாள் கிரிக் கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது .

மேலும் 2024 முதல் 2027 ஆம் ஆண்டுவரை பெண்களுக்கான ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகள் இந்திய துணைக் கண்டத்தில் இடம்பெறவுள்ளன .

2024 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டி பங்களாதேஷிலும் 2026 இங்கிலாந்திலும் இடம்பெறவுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது .

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரை இங்கிலாந்து நடத்துகிறது . அத்தோடு இரண்டாவது முறையாக மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரை பங்களாதேஷ் நடத்தவுள்ளது .

இதேவேளை இலங்கை தகுதி பெற்றால் 2027 இருபதுக்கு 20 சம்பியன்ஸ் ட்ரோபி இலங்கையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

Recent News