Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsதலிபான்களை எதிா்த்து பெண்கள் ஆா்ப்பாட்டம்…!

தலிபான்களை எதிா்த்து பெண்கள் ஆா்ப்பாட்டம்…!

மகளிா் தினத்தை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளா்களின் அடக்குமுறைக்கு எதிராக ஏராளமான பெண்கள் துணிச்சலாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.இது குறித்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வாஜிதா என்பவா் கூறுகையில்,

‘இந்த மகளிா் தினத்தில், பெண்களுக்கு கல்வி உரிமை, வேலை செய்யும் உரிமை, சமுதாயத்துக்கு பங்களிப்பதற்கான வாய்ப்பு ஆகியவற்றை அளிக்குமாறு ஆப்கன் அரசை  வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினோம் என தெரிவித்துள்ளார்
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படையினா் வெளியேறியதற்குப் பிறகு அந்த நாட்டின் ஆட்சியை கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள், தங்களது பழைய ஆட்சியைப் போல் இல்லாமல் மிதவாதப் போக்கைக் கடைப்பிடிக்கப்போவதாக வாக்குறுதி அளித்தனா்.

இருந்தாலும்,பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அவா்கள் நாளடைவில் பறித்தனா். இதற்கு சா்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

Recent News