Thursday, January 23, 2025
HomeLatest Newsஇசைநிகழ்ச்சியில் பறந்த பெண்களின் மார்புக் கச்சைகள்-ஏன் தெரியுமா?

இசைநிகழ்ச்சியில் பறந்த பெண்களின் மார்புக் கச்சைகள்-ஏன் தெரியுமா?

26 வயதான அமெரிக்க ராப் பாடகர் யுங் கிரேவி என்ற மாத்யூ ரேமண்ட் ஹௌரி, 2017ஆம் ஆண்டு முதல் பிரபலமாக அறியப்படுகிறார்.

மூன்று ஆல்பம் பாடல்கள், 7 சர்வதேச இசை சுற்றுப்பயணம் என யுங் கிரேவி பல்வேறு வகையில் மக்களிடம் சென்றடைந்துள்ளார்.

இவரின் இசை நிகழ்ச்சிகளுக்கு ஆண் இரசிகர்களை காட்டிலும் பெண் இரசிகர்கள் அதிகமாக வருவார்கள். தற்போது, அவர் வித்தியாசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

அதாவது, அவரது இசை நிகழ்ச்சி மேடையை நோக்கி சுமார் 159 ப்ராக்கள் தூக்கி வீசப்பட்டுள்ளது. இதனை ஒரு சாதனை மைல்கள் என அவர் கூறியுள்ளார். 

‘அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏறத்தாழ 159 பெண்களின் ப்ரா, உள்ளாடையை நாங்கள் சேகரித்துள்ளோம்’ என்றார். இதற்கு காரணம், அவர் முன்னதாக வெளியிட்டிருந்த டிக் டாக் வீடியோ ஒன்றுதான்.

Recent News