Saturday, January 25, 2025
HomeLatest Newsமப்பில் கூகுள் மேப்பை பார்த்து காருடன் கடலிற்குள் மட்டையாகிய பெண்கள்..!

மப்பில் கூகுள் மேப்பை பார்த்து காருடன் கடலிற்குள் மட்டையாகிய பெண்கள்..!

குடிபோதையில் கூகுள் மேப் திசைகளைப் பின்பற்றி காரை ஓட்டி சென்று கடலிற்குள் விட்ட பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இன்றைய சுழலில், தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ள நிலையில் கூகுள் மேப்பின் உதவியுடன் பயணம் செய்யுமாம் சிலர் சம்மந்தம் இல்லாத இடங்களிற்கு செல்வது வழமை.

அந்த வகையில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்கள் ஒரு சுற்றுலா நிறுவனத்தைக் கண்டு பிடிப்பதற்காக முயற்சித்துள்ளனர்.

இதனால், ஜிபிஎஸ் திசையைப் பின்பற்றி வாகனத்தை ஓட்டியுள்ளார். அது அவர்களை கடலிற்கு அழைத்து சென்றுள்ளது.

இந்நிலையில், அவர்கள் தவறான திருப்பத்தை எடுத்து கடலில் காருடன் தவறி விழுந்துள்ளார்.

அங்கிருந்த உள்ளூர்வாசிகள் இதனை கண்டதும் அந்த சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, கார் கடலில் கவிழ்வதற்கு முன்னர் காரில் இருந்த சுற்றுலா பயணிகள் இருவரையும் பாதுகாப்பாக கார் கண்ணாடி வழியாக இருந்து வெளியே மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தினை நேரில் பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில் இணையவாசிகள் இடையே வைரலாகி வருகின்றது.

Recent News