Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇந்த மாதிரி ஆண்களை பெண்கள் காதலிக்கவே கூடாதாம்!

இந்த மாதிரி ஆண்களை பெண்கள் காதலிக்கவே கூடாதாம்!

பெண்கள், ஒருபோதும் காதலிக்கக்கூடாத ஆண்களின் குணாதிசயங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

வசீகர இளைஞன்

அழகான இளைஞராக இருப்பார். நீங்கள் பார்க்கும்போது, அவருக்கு அத்தனை தகுதிகளும், நல்ல குணாதிசயங்களும் இருப்பதாக தோன்றும். அப்படி இருக்கும்போது அந்த இளைஞனுக்கு ஏன் நல்ல பெண் கிடைக்கவில்லை? என்று கூட நீங்கள் யோசிக்கலாம். ஆனால், அவர் உங்களை அவ்வாறு நம்ப வைத்திருக்கிறார். அவருடைய இலக்கு நீங்கள் தான். நீங்கள் நெருங்கிப் பழகும்போது, அவருடைய உண்மையான முகத்தை தெரிந்து கொண்டால் உடனே உங்களை விட்டு விலக தயாராக இருப்பார்.

திருமணத்திற்கு அவசரம்

சிலர் எப்போதும் திருமணதிற்கு தயாராகவே இருப்பார்கள். முதல் சந்திப்பில் காதல், அடுத்த சில நாட்களுக்குள்ளேயே திருமணம் என உங்களை அவசரப்படுத்துவார்கள். நீங்களும் அவரை நம்பி திருமணபந்தத்தில் இணைந்துவிட்டால் தேனிலவு காலம் முடிந்தவுடன் உங்களை விட்டு ஓடிவிடுவார்கள்.

பணத்தை விரும்புவர்

நீங்கள் அதிகம் சம்பாதிப்பதை தெரிந்து கொண்டு, உங்களை காதல் வலையில் வீழ்த்துவார்கள் இந்தவகை இளைஞர்கள். அவர்கள் தங்களின் சொந்த கதை சோக கதையெல்லாம் சொல்லி, பெரிய பரிதாபத்தை உங்களிடம் தேடிக் கொள்வார்கள். நீங்களும் அந்த பரிதாபத்தில் பணம் கொடுத்து உதவுவீர்கள். ஒருநாள் நீங்கள் விழித்துக் கொள்ளும்போது, நொடியில் உங்களை தூக்கியெறிந்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

அம்மா பையன்

அம்மா பையனாக இருப்பவர்களில் சிலர் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். தாய் சொல்லே தாரக மந்திரம் என இருப்பவர்கள், மனைவியின் பேச்சுக்கு துளியும் மரியாதை கொடுக்காமல் இருப்பார்கள். உணர்ச்சிகளையும், சின்ன சின்ன அன்பான விஷயங்களைக் கூட இப்படியான கணவன்களிடம் பெண்கள் அனுபவிக்க முடியாது. அவர்கள் உங்களுக்கு எப்போதும் மன காயத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

மேலும், வாழ்க்கையின் தீவிரத்தை புரியாத ஆண்கள் உள்ளிட்டோரை அடையாளம் கண்டு, தங்களுக்கு பொருத்தமான ஆண்களை பெண்கள் தேர்ந்தெடுப்பது நல்லது.

Recent News