Wednesday, December 25, 2024
HomeLatest Newsஇஸ்லாத்தில் பெண்களுக்கு சகல உரிமைகளும் உண்டு: தலிபான்கள் அறிக்கை

இஸ்லாத்தில் பெண்களுக்கு சகல உரிமைகளும் உண்டு: தலிபான்கள் அறிக்கை

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைவசம் வைத்திருக்கின்ற தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விடயத்தில் கடும் போக்கை கையாண்டு வருவதாக சர்வதேச மட்டத்திலும் ஆப்கானிஸ்தானின் பொது அமைப்புக்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்ற நிலை காணப்படுகின்றது

பெண்களுக்கான கல்வி, வேலை மற்றும் சுதந்திரமான வாழ்க்கை முறை என்பனவற்றில் இருந்து பெண்கள் ஒதுக்கப்படுவதாகவும், பெண்கள் அடிமைகளாகவும், வீட்டுப் பணிப் பெண்களாகவுமே நடத்தப்படுவதாகவும் தலிபான்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு வந்துள்ள நிலையில் தற்போது அவற்றிற்கான உரிமைகள் மீண்டும் கிடைக்கச் செய்துள்ளதாக தலிபான்களின் செய்தி தொடர்பாளர் “சதேக் அகிஃப் முஹாஜிர்” “அல் ஜெசீரா” ஊடகத்திடம் தெரிவித்திருக்கின்றார்.

இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தலிபான்கள் அமெரிக்க படைகளிடம் இருந்து ஆப்கானிஸ்தானை முழுவதும் கைப்பற்றியதுடன் ஆப்கானிஸ்தானில் இருந்த அனைத்து பெண்கள் உயர் நிலைப் பாடசாலைகளையும் மூடியதோடு பெண்கள் முகத்தை முழுவதும் மறைக்க வேண்டும் என்பதுடன் ஆண்களின் துணையின்றி பெண்கள் நீண்ட பயணங்களை தனியாக மேற்கொள்ள முடியாது என்பன போன்ற கட்டுப்பாடுகளை கடுமையாக விதித்திருந்த நிலையில் பெண்கள் அமைப்புக்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் தலிபான்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியிருந்த நிலையில் பல உலக நாடுகள் பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும் என தலிபான்களுக்கு தொடர் அழுத்தங்களை கொடுத்த வந்திருந்தனர். இந்நிலையில் மேற்படி மாற்றம் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Recent News