Wednesday, January 22, 2025
HomeLatest Newsமுதல்நாளில் மக்களின் வாக்கை தட்டித் தூக்கிய ஜனனி! எவிக்ஷனில் முதல் ஆளாக எஸ்கேப்

முதல்நாளில் மக்களின் வாக்கை தட்டித் தூக்கிய ஜனனி! எவிக்ஷனில் முதல் ஆளாக எஸ்கேப்

பிக்பாஸில் இந்த வாரம் நாமினேஷன் ஆனவர்களில் இலங்கை பெண் ஜனனி முதலிடத்தில் அதிக வாக்குகளைப் பெற்று ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜனனி, கதிரவன், ரச்சிதா, தனலட்சுமி, குயின்ஸி, மைனா என ஆறு பேர் நாமினேஷனில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இலங்கை பெண் ஜனனி ஓட்டிங் லிஸ்டில் முன்னணியில் இருந்து வருகின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி வருவதற்கு முன்பே ஜனனிக்கு ஆர்மி ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள்.

இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் வந்த ஜனனிக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்து வருகின்றது. கதிரவன் ஜனனி இருவரும் டாப்பில் இருந்து வருகின்றனர்.

ஜனனி செய்யும் சின்ன சின்ன விடயங்கள் கூட ரசிகர்களால் அதிகமாக கவரப்படுகின்றது. நேற்றைய தினத்தில் புடவையில் காணப்பட்ட ஜனனி, பிக்பாஸுக்கு மட்டும் காட்டுகிறேன் என்று கமெரா முன்பு கூறியது ரசிக்கப்பட்டது.

அசீம் இந்த வார தலைவராக இருக்கும் நிலையில், அவரவர்களுக்கு கொடுக்கப்படும் பழங்களை அவர்கள் அருகே வைத்துக் கொள்ள கோரினார். இதில் ஜனனி ஒரு ஜாடியில் தனது மாதுளம்பழத்தினை மறைத்து வைத்தார்.

Recent News