Thursday, December 26, 2024
HomeLatest Newsகாதணிகளுக்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்! – இலங்கையில் தொடரும் அவலம்

காதணிகளுக்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்! – இலங்கையில் தொடரும் அவலம்

பொல்கஹவெல – தமுனுகொல பிரதேசத்தில் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்டு, அவரது காதுகள் கிழித்து ஒரு ஜோடி காதணிகள் மற்றும் வீட்டில் இருந்த ஏனைய பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 73 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த அவர், நேற்று மதியம் இந்த கொல்லப்பட்டிருக்கலாமென காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இப்பெண்ணின் மகள் நேற்று மாலை வீட்டுக்கு சென்றிருந்தபோது, அவர் கொல்லப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த கொலைசெய்யப்பட்டதன் பின்னர், பணம் அவரது ஜோடி காதணிகள் மற்றும் மடிக்கணினி ஆகியவை திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

Recent News