Tuesday, December 24, 2024
HomeLatest Newsமிதிபலகையில் பயணித்தவருக்கு நேர்ந்த அவலம்

மிதிபலகையில் பயணித்தவருக்கு நேர்ந்த அவலம்

பேருந்தின் மிதிபலகையில் பயணம் செய்த குடும்பத்தலைவர் ஒருவர் தவறிவீழ்ந்து காயமடைந்த நிலையில் யாழ் . போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .

இந்தச் சம்பவம் மீசாலை ஏ -9 வீதியில் இடம்பெற்றுள்ளது .

கண்டியைச் சேர்ந்த இராசேந்திரன் செல்வகுமார் ( வயது -30 ) என்பவரே காயமடைந்துள்ளார் .

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்குச் சென்ற பேருந்தில் பயணித்த குறித்த நபர், பேருந்தில் இடநெருக்கடி காரணமாக மிதிபலகையில் நின்று பயணித்த வேளை தவறிவீழ்ந்து காயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

Recent News