Monday, December 23, 2024
HomeLatest Newsநடுநிலையான செய்திகளை வெயிட்டால் “you tube” தடை செய்யுமா ?

நடுநிலையான செய்திகளை வெயிட்டால் “you tube” தடை செய்யுமா ?

சர்வதேச ஆங்கில ஊடகமான ” வியோன் ” கடந்த ஏழு(7) நாட்களாக முடக்கப்பட்டது.யூ ரியூப்பின் விதிமுறைகளை மீறி செய்திகளை வெளியிட்டமையால் இந்த நிலை ஏற்பட்டடது. இதனை தொடர்ந்து மீண்டும் தந்து செய்திச் சேவையை ஆரம்பித்துள்ள குறித்த ஆங்கில ஊடகம் தமது செய்திகள் தொடர்பான தன்னிலை விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

குறித்த விளக்கத்திற்கு பதில் கமெண்ட் மூலம் பதில் வழங்கியுள்ள ஆதரவாளர்கள், நடுநிலையான செய்திகளை வெளியிட்டால் யூ ரியூப் அவற்றை தடை செய்யுமா? என்றவாறான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

குறித்த ஆங்கில ஊடகம் வெளியிட்ட இரண்டு வீடியோக்கள் ,தமது யூ டியூப் ஒழுங்கு விதிமுறைகளை மீறியுள்ளன என தெரிவித்து வீடியோக்கள் நீக்கப்பட்டன.அதே வீடியோவை வெளியிட்ட சர்வதேச ஆங்கில ஊடங்கள் இரண்டின் மீது நடவடிக்கை எடுக்காமல் வியோன் சேனல் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த 10ம் திகதி வெளியிடப்பட்ட வீடியோ செய்தியுடன் அவர்கள் எங்களுடன் முரண்பட தொடங்கினார்கள். அந்த செய்தி என்ன வென்றால் இரண்டு நேரடி வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டன.

ஒன்று உக்ரைனிய வெளியுறவுத் துறை அமைச்சர் Dmytro Kuleba மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் Sergey Viktorovich Lavrov ஆகியோரின் நேரடி ஔிபரப்பினை வெளிப்படுத்தியிருந்தோம்.

நாட்கள் கடந்தன ஒன்றும் நடக்கவில்லை. பின்னர் 22ம் திகதி யூடியுப் தலைமையிடமிருந்து எமக்கு செய்தி கிட்டியது. அவர்கள் சொன்னர்கள் உங்களது வீடியோ யூடியுப் சமுக விதிமுறைகளை மீறி வன்முறைகளை ஏற்படுத்தும் நோக்கில் இருப்பதால் தளத்தில் இருந்து நீக்கப்படுகின்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மறுநாள் யூடியுப் எமது மேன்முறையீட்டை நிராகரித்தது. அதற்கான காரணத்தை யூடியுப் எமக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தது. அதில் உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம் குறித்து யூடியுப் கொண்டிருந்த சட்ட விதி முறைகளை மேற்படி நீக்கப்பட்ட வீடியோ பதிவு கொண்டிருந்ததாகவும் அதனை வன்முறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் வியோனின் யூடியுப் தளம் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

யூடியுப்பிற்கு ரஷ்யாவினை புறக்கணித்து மேற்கு நாடுகள் சொல்வதை அங்கீகரிக்க வேண்டும் அவ்வாறு செய்யும் போது அவர்கள் எம்மை ஆதரிப்பார்கள் ஆனால் எமக்கு பக்க சார்பாக செயற்பட முடியாது. இரண்டு தரப்பிலும் தெரிவிக்கப்படும் மற்றும் நடைபெறும் உண்மைச் சம்பவங்களை தெரியப்படுத்துவது தான் எமது கடமை.

ஆனால் மேற்படி சர்ச்சைக்குரிய ரஷ்ய அமைச்சரின் பேட்டியானது ராய்ட்டர்ஸ் மற்றும் சில வெளிநாட்டு ஊடகங்களில் தடையின்றி பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. யூடியுப் அந்த ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை ஏன்?

அதேபோன்று யூடியுப் சட்ட விதிமுறைகளை தெளிவாக மீறும் இரண்டு வீடியோ ஔிப் பதிவுகள் அண்மையில் இரு வெவ்வேறு தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இன்று வரை யூடியுப் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

ஏழு நாட்கள் தடை செய்யப்பட்ட எமது தளத்திற்கு எந்த நிவாரணமும் இல்லை. யூடியுப்பிற்கு ரஷ்யாவை நிராகரிக்கும் செய்திகள் மாத்திரம் ஔிபரப்ப வேண்டும் ஆனால் எம்மால் அது முடியாது நாம் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் உண்மைகளை மக்கள் ஏற்கும் அதேவேளை பொய்களை மக்கள் நிராகரிப்பார்கள் என்பது எமக்கு தெரியும்.
எனவே தொடர்ந்தும் எமக்கு ஆதரவளியுங்கள் உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கும் தொடர்புகளிற்கும் எமது நன்றிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Recent News