Wednesday, December 25, 2024
HomeLatest Newsசாப்பாடு பண்ணிக் கொடுங்க என்று கெஞ்சனுமா உங்க கிட்ட- மகேஷ்வரியுடன் குழம்பிய மைனா- கடுப்பேற்றும் 3வது...

சாப்பாடு பண்ணிக் கொடுங்க என்று கெஞ்சனுமா உங்க கிட்ட- மகேஷ்வரியுடன் குழம்பிய மைனா- கடுப்பேற்றும் 3வது ப்ரோமோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக ஒரு மாதம் ஆகிவிட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அதேபோல் ஜிபி முத்துவும் சொந்த காரணங்களுக்காக பாதியிலேயே வெளியேறினார்.

தற்போது 17 போட்டியாளர்களுடன் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில், கடந்த வாரம் கொடுக்கப்பட்ட டிவி டாஸ்க் சொதப்பலாக அமைந்ததால், இந்த வாரம் டிஆர்பி-யை எகிற வைக்க புது டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார் பிக்பாஸ். அதன்படி பேக்கரி டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது தொழிலாளர்கள் எங்களுக்கு சாப்பாடு தரமாட்டீங்களா என மைனா நந்தினி மகேஷ்வரியிடம் சண்டை பிடித்துள்ளார்.இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

Recent News