Sunday, January 12, 2025
HomeLatest Newsஉயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு ஏற்படுமா? வெளியான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு ஏற்படுமா? வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

பரீட்சை நடைபெறும் காலத்தில், பரீட்சைகள் ஆணையாளரிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தற்போது தயாரித்து வருகிறோம் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பரீட்சையின் போது மின்சாரம் துண்டிக்கப்படுவது நியாயமில்லை என நான் கருதுகின்றேன், எனவே பரீட்சை திணைக்களத்திடம் அட்டவணையை கோரி மின்வேட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு ஒரு அமைப்பை தயார் செய்ய எதிர்பார்க்கிறோம் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Recent News