Wednesday, March 5, 2025
HomeLatest Newsதனியார் பேருந்து சேவைகள் முடங்குமா?

தனியார் பேருந்து சேவைகள் முடங்குமா?

நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, அடுத்த வாரத்தில் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையினால் வழங்கப்படும் டீசல் தற்போது பற்றாக்குறையாக உள்ளதோடு டீசல் இன்மையால் இன்றைய தினம் பெருமளவான பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் அடுத்த வாரம் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கக்கூடும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார் .

Recent News