Tuesday, December 24, 2024
HomeLatest Newsபஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா? தீர்வின்றி நிறைவடைந்த கலந்துரையாடல்

பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா? தீர்வின்றி நிறைவடைந்த கலந்துரையாடல்

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் நடைபெற்ற கலந்துரையாடல், உடன்பாடு எட்டப்படாமல் முடிவுக்கு வந்ததாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து, பேருந்து கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்த கோரிக்கை குறித்து இன்று கலந்துரையாடல் நடைபெற்றது.

எனினும், எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில் கலந்துரையாடல் நிறைவடைந்ததாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டீசல் பற்றாக்குறையின் காரணமாக இன்று தனியார் பேருந்து சேவைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Recent News