Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇலங்கை விடயத்தில் சீனாவும், இந்தியாவும் மௌனம் காப்பது ஏன்?

இலங்கை விடயத்தில் சீனாவும், இந்தியாவும் மௌனம் காப்பது ஏன்?

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு பாரிஸ் கிளப் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் வலியுறுத்தியுள்ள போதிலும் அதற்கான பதில் இன்னமும் இவ்விரு நாடுகளிடம் இருந்தும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் மாநாட்டின் போதும் பாரிஸ் கிளப் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், இலங்கை தரப்பை சந்தித்து கலந்துரையாடிய வேளையில் இது குறித்து அறிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

ஐ.எம்.எப் மூலமாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், ஐ.எம்.எப்புடன் செய்துகொள்ளும் உடன்படிக்கையில் பிரதான நிபந்தனைகளில் ஒன்றாக இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்டவேண்டும் என்பதாகும்.

எனினும், இந்த விடயத்தில் இன்னமும் பிரதான கடன் வழங்குநர்களான இந்தியா மற்றும் சீனா இணக்கம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News