Thursday, January 23, 2025
HomeLatest Newsபிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் பெண் போட்டியாளர் யார்? -அனல் தெறிக்கும் ஓட்டிங்

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் பெண் போட்டியாளர் யார்? -அனல் தெறிக்கும் ஓட்டிங்

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் ஒரு பெண் போட்டியாளர் வெளியேற்றப்படலாம் என்று ரசிகர்கள் கணித்துள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று வாரங்களை நிறைவு செய்துள்ளது.இதில்
கலந்து கொண்ட 21 போட்டியாளர்களில், இதுவரை மூன்று பேர் வெளியேறியுள்ளனர்.இந்த நிலையில் தற்போது இந்த வாரம் யார் வெளியேற போவது என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

விக்ரமன், அசீம், ஆயிஷா, செரினா மற்றும் கதிர் ஆகியோர் எலிமினேஷனில் இடம் பெற்றுள்ளனர்.

ரசிகர்கள் கணிப்பு பலிக்குமா?

இதுவரை பதிவான வாக்குகளின் படி விக்ரமன் முதல் இடத்திலும் , கடைசி இடத்தில் செரினாவும் அதற்கு
முந்தைய இடத்தில் ஆயிஷாவும் இருக்கிறார்கள்.

எனவே செரினா அல்லது ஆயிஷா இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்படுகிறது . பார்க்கலாம் கடந்த இரண்டு வாரங்களும் ரசிகர்கள் கணித்ததை போலவே பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த வாரம் ரசிகர்கள் கணிப்பு பலிக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Recent News