இலங்கையில் அரச ஊழியர்கள் செய்யும் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்ய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1905 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இந்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்று (4) அறிவித்துள்ளது.
மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் சேவையாற்றுவோரின் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை இந்த இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.
மேலும், பதிவாளர் திணைக்களம் மற்றும் ஓய்வூதியத் திணைக்களத்தில் பணியாற்றுபவர்கள் செய்யும் இத்தகைய செயல்கள் குறித்த முறைப்பாடுகளையும் அதே எண்ணுக்கு அனுப்பலாம்.
மேலும், அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் பொதுப் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படும் இலஞ்சம் அல்லது ஊழல் நடவடிக்கைகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு, 1954 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அனுப்பி வைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்