புகுஷிமா அணுஉலை நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் நேற்று பசிபிக் கடலில் வெளியேற்றியது. ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை நிலையத்தில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டது.
இதனை கட்டுப்படுத்த கடல் நீர் மற்றும் போரிக் அமில ரசாயனத்தை ஜப்பான் பயன்படுத்தியது. அணுக்கசிவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட கடலில் நீர், கதிரியக்க கழிவு நீராக மாறியது.
அந்த நீரை சுத்திகரித்து பசிபிக் கடலில் விட ஜப்பான் முயற்சி மேற்கொண்டது.இதற்காக அவற்றை சுத்திகரித்து சேமித்து வைக்கப்பட்டது. ஆனால், மீனவர்கள் மற்றும் சீனா தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
எனினும், நீரை வெளியேற்றுவதற்கான அனைத்து அனுமதிகளையும் ஜப்பான் பெற்றது. இதனால் நேற்று , முதல் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் வெளியேற்றப்படும் என கடந்த வாரம் ஜப்பான் பிரதமர் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், நேற்று முதல் பகுதியாக சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் பசிபிக் கடலில் திறந்து விடப்பட்டுள்ளது.
அணுஉலை நிலையத்தின் கட்டுப்பாடு அறையில் இருந்து லைவ் வீடியோ மூலம் தண்ணீர் திறந்து விடப்படும் காட்சி வெளியானது.ஜப்பான் வெளியேற்றிய நிலையில், அந்நாட்டு கடல் உணவுகள் இறக்குமதிக்கு, சீனாவின் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக தடைவிதித்துள்ளனர்.
“நாட்டின் ஆரோக்கியம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு அணுசக்தியால் அசுத்தமான நீர் வெளியேற்றத்தின் அபாயங்களைத் தடுக்க ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மாற்றியமைக்கப்படும்” என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.