Tuesday, December 24, 2024
HomeLatest Newsஉணவுப் பற்றாக்குறைக்கு தீர்வு என்ன? சஜித் கேள்வி

உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வு என்ன? சஜித் கேள்வி

நாட்டின் தற்போதைய உணவுப் பற்றாக்குறைக்கு அரசாங்கத்தின் தீர்வு என்னவென்பதுகூட அரசாங்கத்துக்கு தெரியவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றிடம்பெற்ற விவசாயம் மற்றும் உணவு விநியோக சேவைத்துறை நிபுணர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலம் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் ​​எந்த நாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படப்போகிறது என்பது கூட அரசுக்கு தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் நிறைந்த நாட்டை உருவாக்க இடமளித்து விட்டு அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் தற்போதைய நெருக்கடிக்கு அரசாங்கத்தில் எவரிடமும் தீர்வில்லை எனவும் குறிப்பிட்டார்.

Recent News