Thursday, January 23, 2025
HomeLatest Newsஅவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக குவிந்த பெருமளவு மக்கள்-காரணம் என்ன?

அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக குவிந்த பெருமளவு மக்கள்-காரணம் என்ன?

புகைப்படம் எடுப்பதை அனுமதிக்கும் வகையில் சட்டங்கள் மாற்றப்பட்டு இருந்தாலும், பங்கேற்பாளர்கள் காலை 10 மணி வரை மட்டுமே கடற்கரையில் நிர்வாணமாக இருக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் காலை 7 மணிக்கே கலைப் படைப்பிற்கான வேலைகள் முடிவடைந்து மக்கள் அனைவரும் நிர்வாண கோலத்தில் இருந்து உருமாறினர்.தோல் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு கலைப் படைப்பில் பங்கு பெறும் வகையில் அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நிர்வாண கோலத்தில் தோன்றியுள்ளனர்.

புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் கலைஞர் ஸ்பென்சர் துனிக்கின் கலைப் படைப்பிற்காக பொது நிர்வாணத்தை அனுமதிக்க உள்ளூர் சட்டங்கள் மாற்றப்பட்ட வேண்டி இருந்தது. அதனடிப்படையில் காலை 3:30 மணிக்கு பெரும் திரளான பங்கேற்பாளர்கள் கடற்கரையில் ஒன்று திரண்டு, கலை படைப்பிற்காக தங்கள் ஆடைகளை கலைந்து நிர்வாணமாக காட்சியளித்தனர்.

Recent News