Thursday, January 23, 2025
HomeLatest Newsநீங்கள் மரணித்தால் உங்களது Google Account என்னவாகும்? ரகசிய தகவல்களை பாதுகாப்பது எப்படி?

நீங்கள் மரணித்தால் உங்களது Google Account என்னவாகும்? ரகசிய தகவல்களை பாதுகாப்பது எப்படி?

எமது வாழ்க்கை தற்காலத்தில் அதிகளவில் டிஜிட்டல் உலகத்தில் அதிகளவு தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.

படங்கள், ஆவணங்கள், மின்னஞ்சல்கள் என பல்வேறு ஆவணங்களை நாம் கூகுள் கணக்கின் ஊடாக சேமித்து வைத்துக்கொள்கின்றோம்.இவ்வாறு சேமிக்கப்படும் தகவல்களுக்கு தரவுகள் எம் மரணத்தின் பின்னர் என்னவாகும் என்ற கேள்வி பலருக்கு இருக்கலாம்.

அதிர்ஷ்டவசமாக கூகுள் நிறுவனம் ஒருவரின் மரணத்தின் பின்னர் அந்த தகவல்களை நம்பகமான ஒருவருடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஏற்பாடுகளை செய்துள்ளது.

குடும்ப உறுப்பினரோ அல்லது நெருங்கிய நண்பரோ இந்த தகவல்களின் குறிப்பிடத்தக்களவான அளவினை பெற்றுக்கொள்ள முடியும்.இதற்காக நாம் கூகுள் Inactive Account Manager என்ற ஆப்சனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

குறிப்பிட்ட காலத்திற்கு கூகுள் கணக்கு செயற்படவில்லை என்றால் உறவினர் அல்லது நண்பர் ஒருவர் கூகுள் கணக்கினை குறிப்பிடத்தக்களவு தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியே இந்த Inactive Account Manager என்பதாகும்.

Account Setting பகுதியில் பயனர்கள் இந்த ஆப்சனை ஆக்டிவ் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் உங்கள் கணக்கினை பயன்படுத்துகின்றீர்களா என்பதனை கூகுள் நிறுவனம் பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்திக்கொள்ளும்.

விசேட ஏற்பாடுகள் எதுவும் செய்யாவிட்டால் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் கூகுள் நிறுவனம் உங்களது கணக்கின் அனைத்து விபரங்களை அழித்துவிடும்.

Inactive என கூகுள் நிர்ணயம் செய்வதற்கு பயனர் ஓர் கால எல்லையை வரையறுத்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

ஆறு மாதங்கள், 12 மாதங்கள் அல்லது 18 மாதங்கள் என பயனர் அதனை தீர்மானிக்க முடியும்.

இந்த காலம் நிறைவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கூகுள் பயனரைத் தொடர்பு கொள்ளும்.

நான் இறந்த பிறகு எனது அனைத்து தகவல்களும் அழிவதை நான் விரும்பவில்லை. இந்த தகவல்களை என் குடும்ப உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள என்ன வழி?

பயனர்கள் நம்பகமான ஒருவரின் பெயரை பரிந்துரை செய்ய முடியும், பயனரின் மறைவின் பின்னர் இந்த கூகுள் கணக்கினை தகவல்களை குறித்த பரிந்துரை செய்யப்பட்டவர் பெற்றுக்கொள்ள முடியும்.

தகவல் பெற்றுக்கொள்ளக் கூடியவரின் மின்னஞ்சல் முகவரியை வழங்க முடியும் என்பதுடன் என்ன என்ன தகவல்களை மட்டும் குறித்த பிரதிநிதி பெற்றுக் கொள்ள முடியும் என்பதனையும் பயனர் நிர்ணயம் செய்ய முடியும்.

பயனரின் கணக்கு Inactive செய்யப்பட்டதும் அவரது பெயரிடப்பட்ட பிரதிநிதிக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தகவல் அனுப்பி வைக்கும்.

மரணத்தின் பின்னர் கணக்கினை பயன்படுத்துபவருக்கு எவ்வாறான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்பதனையும் பயனர் முன்கூட்டியே நிர்ணயித்து அந்த தகவல்களையும் வழங்க முடியும்.

Inactive Account ஆப்சனை எவ்வாறு எக்டிவ் செய்வது?

  • உங்களது ப்ரோபைல் படத்திற்கு அருகாமையில் காணப்படும் Manage your Google Account என்ற பகுதியை கிளிக் செய்யவும்.
  • தற்பொழுது Data & Privacy பகுதிக்கு செல்லவும் பின்னர் ‘More Options’ என்பதனை தெரிவு செய்க

Make a plan for your digital legacy’ என்பதனை ‘plan what happens to your data’ என்பதனை தெரிக

  • தற்பொழுது Inactive Account Manager.
  • கூகுள் காண்பிக்கும் ஸ்டார்ட் என்பதனை அழுத்தவும்

முதல் பகுதியில் எவ்வளவு காலம் செயற்படாமல் இருந்தால் இன்எக்டிவ் செய்ய வேண்டும் என்பதனை தீர்மானிக்க வேண்டும்.

உதாரணமாக ஆறு மாதங்களை தெரிவு செய்தால், செயற்படாதிருக்கும் காலத்தில் கூகுள் மின்னஞ்சல் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் அனுப்பி வைக்கும்.

உங்களது அலைபேசி இலக்கம், ஜீமெயில் கணக்கு முகவரி மற்றும் ரிக்கவரி மெயில் ஐடி என்பனவற்றை வழங்க வேண்டும்.

இரண்டாம் பகுதியில் யாருக்கு என்ன பகிரப்ப்பட வேண்டும் ( “Choose who to notify & what to share”) என கூகுள் கேள்வி எழுப்பும்.

உங்களுக்கு பத்து பேர் வரையில் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக தெரிவு செய்ய முடியும்.

உங்களது ஒரு தொகுதி தகவல்களை பார்வையிட அவர்களுக்கு நீங்கள் அனுமதி வழங்க முடியும்.

நம்பகமான மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்களை வழங்கவும். அவர்களின் அலைபேசி இலக்கங்களையும் நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்.

கணக்கு Inactive ஆனதன் பின்னர் என்ன தகவல் அனுப்பி வைக்க வேண்டும் என்பதனையும் தீர்மானித்துக்கொள்ள முடியும்.

இறுதியாக மூன்றாம் பகுதியில் கணக்கு இன்எக்டிவ் ஆனதன் பின்னர் கணக்கின் தகவல்களை என்ன செய்ய வேண்டுமென கூகுள் கேட்கும்.

Inactive ஆனதன் பின்னர் மூன்று மாத காலப் பகுதிக்குள் தகவல்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் அதன் பின்னர் தகவல்கள் அழிக்கப்படும்.

“Should we delete your Google Account if it becomes inactiveஎன கூகுள் கேள்வி எழுப்பும். ஆம் என பதிலளித்தால் மூன்று மாதங்களின் பின்னர் கணக்கு செயற்படுத்தப்படாது.

ஒரு தடவை நீங்கள் இந்த ஆப்சன்களை தெரிவு செய்த பின்னர் தேவை என்றால் அதில் பயனர்கள் மாற்றங்களைச் செய்து கொள்ள முடியும்.

இறந்த பின் கூகுள் கணக்கில் தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர் நிறுவனத்திடம் கோரிக்கை முன்வைத்தால் சில தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். எனினும் கடவுச் சொல் மற்றும் லாகின் தகவல்கள் வழங்கப்படாது.

Recent News