Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇலங்கை வந்த சுற்றுலாப்பயணிக்கு நேர்ந்த அவலம் : தொடரும் மர்மம்!!

இலங்கை வந்த சுற்றுலாப்பயணிக்கு நேர்ந்த அவலம் : தொடரும் மர்மம்!!

வீடொன்றில், அறையை வாடகைக்கு எடுத்து அங்கு வசித்து வந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியின் சடலம் அறையின் கட்டிலில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என வெலிகமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த, சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

வெலிகமை காவல்துறை பிரிவில் காலி – மாத்தறை பழைய வீதியில் உள்ள வீடொன்றில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த 32 வயதான ரஷ்ய நாட்டவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது, மரணம் தொடர்பில் வெலிகமை காவல் நிலையத்திற்கு 119 அவசர அழைப்பு இலக்கம் ஊடாக வீட்டின் உரிமையாளர் தகவல் வழங்கியுள்ளார்.

வெலிகமை நகரம் இதனையடுத்து அங்கு சென்ற வெலிகமை காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் உடலை மீட்டுள்ளதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரி மருத்துவர் எம்.எம்.அமரஜீவவுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Recent News