Wednesday, December 25, 2024
HomeLatest Newsதேசிய பாதுகாப்புக்கு என்ன நடந்தது? மைத்திரி கோபம்!

தேசிய பாதுகாப்புக்கு என்ன நடந்தது? மைத்திரி கோபம்!

‘ தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை என அறிவிப்பு விடுத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஇ தற்போது அந்த உறுதிமொழியை மீறிவிட்டார்.’ – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதாவது எனது ஆட்சியின்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது என சுட்டிக்காட்டினர். தாங்கள் ஆட்சிபீடமேறினால் தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை எனவும் அறிவிப்பு விடுத்தனர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது.’ எனவும் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், தற்போதைய அரசு சர்வக்கட்சி அரசு கிடையாது எனவும், அதன் மூலம் சர்வதேச ஆதரவை பெறமுடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

Recent News