Monday, January 27, 2025
HomeLatest Newsவார காதல் ராசிபலன்! உங்கள் காதல் வாழ்க்கை இந்த வாரம் எப்படி இருக்கும்?

வார காதல் ராசிபலன்! உங்கள் காதல் வாழ்க்கை இந்த வாரம் எப்படி இருக்கும்?

இந்த வாரம் துவக்கத்தில் சுக்கிரன் தனுசு ராசியில் நுழைகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சுக்கிரனின் இடமாற்றம் உங்கள் காதல் வாழ்க்கையை எப்படி மாற்றப்போகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

இந்த வாரம் சில ராசிக்காரர்களுக்கு சிறந்த வாரம் என கிரக மாற்றம் கூறுகிறது. ஆனால், கன்னி மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று கடினமாக இருக்கும். உங்கள் துணையுடனான பிரச்சனைகள் இந்தவாரம் அதிகரித்து, இருவருக்கும் இடையிலான உறவு முறிவதற்கான வாய்ப்பும் அதிகம். காதல் விஷயத்தில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கப் போகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: உறவு வலுப்பெறும்

இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு அன்பின் அடிப்படையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் உண்டாகும். உங்கள் துணையுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும். காதல் வாழ்க்கையில், முடிவு எடுக்க சற்று குழப்பமாக இருப்பீர்கள். உங்கள் காதல் உறவை சிறப்பாகவும் வலுவாகவும் மாற்ற ஒரு பெண்ணின் உதவி கிடைக்கும்.

ரிஷபம் : காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இயல்பாக இருக்கும். நீங்கள் உங்கள் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்துரைப்பதன் மூலம் காதல் வாழ்க்கையில் உள்ள பிரச்சனையை தீர்க்கலாம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசுவது நல்லது. உங்கள் எதிர்காலத்தை பற்றி நீங்கள் புதிய திட்டங்களை திட்டமிடலாம். இது உங்களுக்கு வெற்றியைத்தரும்.

​மிதுனம் : அந்யோனியம் அதிகரிக்கும்

மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் பலவிதமான பலன்களை அனுபவிக்க உள்ளனர். இந்த வாரம், உங்கள் காதல் வாழ்க்கையில் சற்று நிதானமாக இருக்க வேண்டும். இதனால், உங்கள் வாழ்கையில் அமைதி உண்டாகும். இருவருக்கும் இடையிலான பரஸ்பர அன்பு வலுவடையும். இருப்பினும், மனதில் ஏதோ ஒரு தடுமாற்றம் காணப்படும்.

கடகம் : பரஸ்பர அன்பு அதிகரிக்கும்

இந்த வாரம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக வாரம். துவக்கத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வார முடிவில் இருவரும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். உங்கள் துணையுடன் எங்காவது வெளியே செல்ல திட்டமிடலாம். இதனால், இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரிக்கும்.

​சிம்மம் : மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும்

இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இருவருக்கும் இடையில் இருந்த தூரம் குறையும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வதால், மன நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். உங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றி தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம். எல்லாம், நீங்கள் நினைத்தபடி நல்லதாகவே நடக்கும்.

கன்னி : துணையை கவருவீர்கள்

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிமையாக இருக்கும். வாரத்தின் துவக்கத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பரஸ்பர அன்பு இந்த நேரத்தில் வலுவாக இருக்கும். உங்கள் ஆளுமையால் உங்கள் துணையை கவர்வீர்கள். வார இறுதியில், நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதுமட்டுமின்றி பரஸ்பர அன்பும் அதிகரிக்கும்.

​துலாம் : செயலில் வெற்றி கிடைக்கும்

இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று முரண்பாடாக இருக்கும். உங்கள் துணையிடம் பேசும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், யோசிக்காமல் பேசும் சில வார்த்தைகள் மற்றவரை புண்படுத்தலாம். நீங்கள் நிதானமாக சிந்திப்பது மிகவும் முக்கியம். வார நடுப்பகுதியில், சற்று மன அழுத்தத்துடன் காணப்படுவீர்கள். மன அமைதியுடன் எடுக்கும் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். விட்டுக்கொடுத்து போவது நல்லது.

விருச்சிகம் : இன்பமான செய்திகள் வரும்

இந்த வாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு, மகிழ்ச்சியான வாரமாக காணப்படும். இருவருக்கும் இடையிலான பரஸ்பர அன்பு அதிகரிக்கும். உங்கள் துணையின் மீது கவனம் செலுத்துவது, உங்கள் எதிர்க்காலத்திற்கு நன்மை பயக்கும். வார இறுதியில், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் அஅதிகரிக்கும். மேலும், காதல் வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்.

​தனுசு : பார்ட்டி மனநிலை காணப்படும்

தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் காதல் வாழ்க்கையில், மகிழ்ச்சியையும் அமைதியையும் பெறுவார்கள். இது மட்டுமின்றி, உங்கள் துணையுடன் பார்ட்டி செல்வதற்கான சூழலும் மனநிலையும் காணப்படும். உங்கள் காதலுக்கு உதவ சில புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வார இறுதியில், இருவரும் ஒருவருக்கு ஒருவர் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

மகரம் : வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் காதல் வாழ்க்கை சற்று வலி நிறைந்ததாக இருக்கும். எனவே, உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வார இறுதியில், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் காணப்படும். பெரியோர்களின் ஆசியுடன் பரஸ்பர அன்பில் நிம்மதியாக இருப்பீர்கள்.

​கும்பம் : முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் காதல் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும். உங்கள் காதல் வாழ்க்கை இந்த வாரம் மிகவும் ரொமாண்டிக்காக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில், சில நல்ல செய்திகளைப் பெறலாம். வார இறுதியில் எந்த முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். அது உங்களுக்கு வெற்றியை தராது.

மீனம் : ரொமான்டிக்காக இருக்கும்

இந்த வாரம் மீன ராசியினருக்கு காதல் நிறைந்த வாரமாக இருக்கும். அத்துடன் அலைச்சல் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் பரஸ்பர வேறுபாடுகளும் ஏற்படலாம். வாழ்க்கையில் அமைதியின்மை உங்களை காயப்படுத்தும். எனவே, நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். வார இறுதியில் நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் அழகிய எதிர்காலத்திற்காக சில உறுதியான முடிவுகளை உங்கள் துணையுடன் நீங்கள் எடுக்கலாம்.

Recent News