Saturday, January 25, 2025
HomeLatest Newsஅமெரிக்க டொலருக்கு ஆப்பு: சீனா புதிய முயற்சி!

அமெரிக்க டொலருக்கு ஆப்பு: சீனா புதிய முயற்சி!

உலக நிதி பொருளாதாரத்தை கணக்கிடுவதற்கு தற்போது அமெரிக்க டொலரே அளவு கோலாக பயன்படுத்தப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த வாரம் உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் புதிய சிந்தனையொன்றை முன்வைத்ததாகவும், இதன்படி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையில் புதிய நாணய பரிமாற்றத்தை ஏற்படுத்தி அமெரிக்காவின் செல்வாக்கை குறைத்து விட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார்.

அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதிக்கத்தை எமது பிராந்தியங்களுக்குள் அனுமதித்தால் எமது ஆசிய பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து விடும் என்றும் இதனால் சீன நாணயத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் பிரதான நாணய பரிமாற்றமாக மாற்ற நடவடிக்கைகள் எடுத்தால் என்ன என்ற கேள்வியை முன்வைத்ததோடு அமெரிக்க டொலரினால் ஏற்படக் கூடி பாதக விளைவுகளையும் எடுத்துக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன அதிபரின் இந்த புதிய சிந்தனை மேற்படி பிராந்திய அமைப்பின் நாடுகளுக்கிடையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மிக விரைவில் உள்ளூர் நாணயம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் இதன் மூலம் அமெரிக்க டொலரின் பாவனை வெகுவாக குறைக்கப்படும் சாத்தியங்கள் தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recent News