Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsவடகொரியா ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் - தென்கொரியா பகிரங்க எச்சரிக்கை..!

வடகொரியா ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – தென்கொரியா பகிரங்க எச்சரிக்கை..!

வடகொரிய அரசு அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், கிம் ஜாங் உன்னின் ஆட்சிக்கு அமெரிக்காவுடன் இணைந்து முடிவு கட்டிவிடுவோம் என தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகியன இரு வேறு கொள்கைகளுடன் பயணிக்கும் இரு துருவங்களாகவே காணப்படுகின்ற நிலையில் தற்போது அதை இன்னும் அதிகரிக்கும் வண்ணம் தென் கொரிய ஜனாதிபதியின் எச்சரிக்கை அமைந்துள்ளது.

இதற்கமைய அந்நாட்டின் 75வது ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு கொட்டும் மழையில் நடத்தப்பட்ட பிரமாண்ட அணிவகுப்பில் அதிநவீன ஏவுகணைகள், டிரோன்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், தென்கொரியாவில் 28 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் முகாமிட்டுள்ள நிலையில் அவர்களில் 300 பேர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recent News