Friday, November 22, 2024
HomeLatest Newsபெட்ரோலிய வளங்களை விற்க விடமாட்டோம்! சஜித்

பெட்ரோலிய வளங்களை விற்க விடமாட்டோம்! சஜித்

நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில், அந்நெருக்கடியை பொருட்டாக வைத்து, நாட்டின் பெறுமதியான வளங்களில் ஒன்றான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ராஜபக்ஸ குடும்பத்தினர் தலைமையிலான இந்த அரசின் முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (28) தெரிவித்தார்.

தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பொன்று நேற்று (28) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், இதில் சம்பந்தப்படும் சகல அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியினால் அமையப்பெறும் அரசாங்கத்தின் கீழ் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய முழுமையான செயல்பாட்டின் ஊடாக 100% மண்ணெண்ணெய் தேவையையும்,சுமார் 50% விமானங்களுக்கான எரிபொருள் தேவையையும், 100% நெக்டா தேவையையும், 30% டீசல், 14% பெட்ரோல், 8% எரிவாயு, மின் உற்பத்திக்குத் தேவையான பதப்படுத்தல் எரிபொருள் 75-100% வரையான தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய பெறுமதி மிக்க வளமாகும்.

இந்நாட்டிலுள்ள தூரநோக்கற்ற,வினைதிறனற்ற அரச நிர்வாகத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள சீர்குலைவின் காரணமாக இந்த தேசிய வளத்தை திருட்டுத்தனமாக ஏலம் விடுவதற்கு முயற்சி செய்கின்றனர்.

அரசுக்குச் சொந்தமான மதிப்புமிக்க நிறுவனங்களை ஏலம் போட முயற்சி நடந்தால்,அதற்கெதிராக கட்சி கோதங்கள் இன்றி ஒரே நிலைப்பாட்டின் கீழ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அவ்வாறே, இந்த அரச வளத்தைப் பாதுகாக்க முன்வந்த பெற்றோலிய தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தொழிலாளர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சேனக பெரேரா,சரத் ​​அபேரத்ன,மனுல சமில் ஏகநாயக்க, இலங்கை சுதந்திர தொழிற்சங்க கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி கே.பி.சமிந்த, எஸ்.வி மாயாதுன்ன, பொது ஊழியர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அசோக் ரன்வல, மனோஜ் விஜேவீர, நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆர்.ஏ.டி.திலங்க, தேசிய ஊழியர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஏ.சி.வசந்த, வீரபாகு பெரேரா,பெற்றோலிய கைத்தொழில் ஊழியர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எல்.டி.சமரகோன், எல்.பிரியதர்ஷன, பொறியியலாளர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விக்கும் மாதவ, ஜனக உதான, லசந்த ஏக்கநாயக்க, லக்சிறி ரணதுங்க, சுத்திகரிப்பு கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி ஆக்ரா வீரசிங்க, சலக விஜேசிங்க உட்பட பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதித்தலைவர் ராஜித சேனாரத்ன உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நிலவரம் தொடர்பிலும், இதிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை அணி களமிறங்கியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மதிய போசன இடைவேளையின் போது இரண்டு விக்கெட்டுகளை இழந்து 68 ஓட்டங்களை பெற்றுள்ளது.

களத்தில் அணித்தலைவர் திமுத் கருணாரட்ண மற்றும் அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

மேலும் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில உள்ள அவுஸ்திரேலியா பலம் வாய்ந்த அணி . அதன் சவாலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த டெஸ்ட்த் தொடர் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடராகவும் கணிக்கப்படுகிறது.

Recent News