ரஷ்யாவின் அணு ஆயுதங்களை தமது நாட்டிற்கு எதிராக செயற்படும் நாடுகளிற்கு எதிராக பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்ட மாட்டோம் என்று பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ தெரிவித்துள்ளாா்.
இது தொடர்பாக பெலாரஸ் அதிபரின் அலுவலம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் பெலாரஸில் நிறுத்தப்படும் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை ஏனைய நாடுகள் மீது பயன்படுத்தும் எண்ணம் எமக்கு கிடையாது.
ஆயினும், பெலாரஸை ஆக்கிரமிப்பதற்கு எந்த நாடாவது எண்ணினால் அந்த நாட்டின் மீது எதிர்த் தாக்குதலை நடத்துவதற்கு ரஷ்யாவின் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த ஒரு போதும் தயங்க மாட்டோம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக காணப்படுகின்றது.
உக்ரைன் – ரஷ்ய போரானது ஓராண்டுகளை கடந்து நடந்து வரும் நிலையில் நோட்டோ நாடுகள் உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை அதிகரித்து வருகின்றன.
அதனால், நேட்டோ நாடுகளை எச்சரிக்கும் வகையில் பெலாரஸில் தங்களது அணு ஆயுதங்களை நிறுத்தப் போவதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்ய அதிபா் புடின் அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.