Wednesday, December 25, 2024
HomeLatest Newsஉக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை விரிவடைய விட மாட்டோம்..!நோட்டோ அதிரடி..!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை விரிவடைய விட மாட்டோம்..!நோட்டோ அதிரடி..!

புதிய உறுப்பினர்களிற்காக எப்பொழுதும் நேட்டோவின் கதவுகள் திறந்திருக்கும் என்று ஒஸ்லோவில் நேட்டோ வெளியுறவு அமைப்பின் தலைவர் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், உக்ரைனை ஆதரிப்பதிலும், பில்லியன் கணக்கான இராணுவ உதவி மற்றும் பிற உதவிகளை வழங்குவதிலும் நேட்டோ முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறுவதை உறுதி செய்யவும், உக்ரைனின் எல்லைகளுக்கு அப்பால் ரஷ்ய இராணுவம் பரவாது தடுப்பதும் நேட்டோவின் மிக முக்கியமான பணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமன்றி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு திட்டத்தை அதன் எல்லைகளுக்கு அருகில் விரிவடையாமல் தடுப்போம் என்றும் கூறியுள்ளார்.

Recent News