Tuesday, December 24, 2024
HomeLatest Newsபுளியம்பழத்தை விற்று வாழ்கிறோம்! வறுமையின் உச்சத்தில் துடிக்கும் குடும்பம் 

புளியம்பழத்தை விற்று வாழ்கிறோம்! வறுமையின் உச்சத்தில் துடிக்கும் குடும்பம் 

கிளிநொச்சியில் வயதான பெரியவர் ஒருவர் ஒரு வேளை உணவினை தேடுவதற்கு கூட கஷ்டப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியே இவ்வாறு தாம் அதியுச்சளவில் கஷ்டத்தை எதிர்கொள்வதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் 75 வயதிற்கும் அதிகமான வயதுடைய முதியவர் தனது இரண்டு பேரப்பிளைகளோடு வசித்து வருகின்றார்.

ஒரு நிரந்தர வீடும் இன்றி எந்தவித பாதுகாப்பும் இல்லாத ஒரு தற்காலிக கொட்டகையில் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாத நிலையில், புளியம் பழத்தினை பொறுக்கி உடைத்து அதை விற்று வரும் பணத்தில் தானும் தனது இரண்டு 18 வயதிற்குட்பட்ட பேரப்பிள்ளைகளையும் வாழ்ந்து வருவதாக தெரிவிதுள்ளார்.

மேலும், தனது பேரப்பிள்ளைகளின் பெற்றோர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டதாகவும் தனக்கு கடந்த ஐந்து வருடகாலமாக இரண்டு கண்பார்வையும் இல்லாததால் பெரும் கஷ்ட நிலையில் வாழ்ந்து வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைகாரணமாக மிக அதிகளவில் கஷ்படுவதனால் ஒரு வேளை உணவை உண்டு வாழ்க்கையை கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Recent News