Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஹமாஸுக்கு எதிரான போரில் தோற்றுவிட்டோம் - இஸ்ரேலின் முன்னாள் தலைமைத் தளபதி..!

ஹமாஸுக்கு எதிரான போரில் தோற்றுவிட்டோம் – இஸ்ரேலின் முன்னாள் தலைமைத் தளபதி..!

ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் தோற்றுவிட்டதாகவும், நெதன்யாகு பதவி விலகினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் இஸ்ரேலின் முன்னாள் தலைமைத் தளபதி டான் ஹாலுட்ஸ் கூறியுள்ளார்.


ஹைஃபாவில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்களுடன் அவர் நடத்திய உரையாடலில் அவர் இந்த கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இதனை இஸ்ரேலிய சேனல் 14 இல் ஒளிபரப்பு செய்துள்ளது. இவருடைய கருத்துக்களை பார்வையாளர்கள் பலர் பாராட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் யாயர் லாபிட், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
பதவி விலக வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “போரின் நடுவில் பிரதமரை மாற்றுவது நல்லதல்ல. ஆனால் பதவியில் இருப்பவர் மோசமானவர். அவர்பிரதமர் பதவியில்  தொடர முடியாது,” என்று லாபிட் கூறியதாக இஸ்ரேலிய செய்தி நிறுவனமான GLZ வானொலி தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் தொடக்கத்தில் நெதன்யாகுவின் போர் அமைச்சரவையில்
சேர லாபிட் மறுத்ததோடு, நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசாங்கத்தை அவர்
தொடர்ந்தும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News