Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld News'ரஷ்யாவைத் தாக்க அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்': உக்ரெய்னுக்கு அனுமதி வழங்கிய ஜோ பைடன் !!!

‘ரஷ்யாவைத் தாக்க அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’: உக்ரெய்னுக்கு அனுமதி வழங்கிய ஜோ பைடன் !!!

ரஷ்யாவுக்கும் உக்ரெய்னுக்கும் இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், ரஷ்யா அதன் நிலையில் முன்னேற்றமடைந்து வருகின்றது.இந்நிலையில் ஏற்கனவே உக்ரெய்னுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா உதவி செய்தது.இவ்வாறிருக்க தற்சமயம் தாங்கள் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவிலுள்ள இராணுவ நிலைகளில் தாக்குதல்களை நடத்தலாம் என உக்ரெய்னுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளதாக அவரது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக உக்ரெய்னின் கார்கிவ் பகுதியில் ரஷ்ய படையினர் முன்னேறி வருகின்றனர். எல்லையைக் கடந்து மிகவும் நெருக்கத்தில் இருந்தபடி தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர்.எனவே ரஷ்யாவின் தாக்குதல்களிலிருந்து தற்காப்புப் பெறுவதற்காக எல்லைக்கு நெருக்கத்தில் உள்ள ரஷ்ய இராணுவ நிலைகளின் மீது மட்டும் தாக்குதல் நடத்துவதற்கு தாங்கள் வழங்கிய ஆயுதங்களை உக்ரெய்ன் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஜோ பைடன் கூறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தாங்களும் இதேபோல் ஒரு அனுமதியை உக்ரெய்னுக்கு வழங்கப்போவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.ஆனால், இந்த நடவடிக்கைகள் மூன்றாம் உலகப்போருக்கு வித்திடும் என இத்தாலி ஒருபுறம் எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News