எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக கடும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதாக முச்சக்கரவண்டிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிட்டால் பல பிரச்சினைகள் உருவாகும் என சங்கத்தின் தலைவர் லலித்தர்மசேகர தெரிவித்துள்ளார்.
நீண்டநேரம் எரிபொருள் வரிசையில் நிற்கவேண்டிய நிலை காரணமாக பல தனிநபர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் நெருக்கடிகள் குறித்து அரசியல் தலைவர்கள் உணர்வற்றவர்களாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ள தர்மசேகர, ஆட்சியில் உள்ளவர்களே இந்த நெருக்கடியை உருவாக்கினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர் எதிர்காலத்தில் நிலைமை மேலும் மோசமடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.