Thursday, December 26, 2024
HomeLatest Newsநாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம்! இயக்குநர் அட்லி வீட்டில் விசேஷம்!

நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம்! இயக்குநர் அட்லி வீட்டில் விசேஷம்!

பிரபல இயக்குநர் அட்லி தந்தையாக போகும் தகவலை டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குநர் அட்லி.இவர் ஆரம்பக்காலக்கட்டத்தில் இயக்குநர் சங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார்.

இதனை தொடர்ந்து இவர் முதலில் நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா ஆகியோரைக் கொண்டு “ராஜா ராணி” என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இது அவருக்கு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்தது. மேலும் தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து தற்போது ஷாருகானுடன் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல் திரைப்படம் வெளியான பிறகு தன்னுடைய நீண்ட நாள் காதலியான விஷ்னு ப்ரியாவை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.இவர்களின் திருமணம் நடந்து சுமார் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி இவர்களுடைய திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவ்வாக இருக்கும் அட்லி, தற்போது திரையுலகை மிரட்டும் வகையில் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதை தன்னுடை டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

Recent News